Translate This Page
மாந்திரீகம்
மாந்திரீகம்
என்பது தொட்டு அறிய முடியாத இயற்கைக்கு
மீறிய மனம் சார்ந்த அமானுக்ஷ்ய ஆற்றல் திரனாகும். இதைக்கொண்டு பிறறையோ அல்லது ஒரு பொருளையோ
தன் வசம் தன் எண்ணப்படி ஆதிக்கம் செய்ய முடியும். இந்த கலை அறிவியல் தத்துவம், மதம்,
உளவியல், குறி சொல்லுதல், இயக்கவியல் மற்றும் மருத்துவம் என பல விக்ஷயங்களை உள்ளடக்கியது.
இது கலாச்சார சூழலை சார்ந்து பல வடிவங்களில் காணப்படுகிறது. மாந்திரீகம் பழமையான சமூக
கலாச்சாரங்களில் மட்டும் இல்லை, இன்றய உயர் கலாச்சார சமூகத்திலும் காணப்படுகிறது. இந்த
மாந்திரீக நம்பிக்கைகள், பல்வேறு சடங்குகள் மற்றும் தொழில் நுப்பங்கள் எனபது பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே உருவாக்கப்பட்டுள்ளது. மாந்திரீகம் என்றாலே பெரும்பாலும் மானுடவியலில் தீங்கு
விளைவிக்கக் கூடியது மற்றும் கொண்டவனையே அழித்துவிடும் முரட்டுத்தனமான, கொடூரமான, சதி
செயல் செய்யக் கூடியது என பரந்து பரவிவிட்டது. ஆனால் இது புத்துயிர் கொடுக்கும் ஒரு
ஆன்மீகப் பயிற்சியாகும். மாந்திரீகம் என்பது ஒரு வாள் போன்ற ஆய்தம். இதை ஆடு மேய்ப்பவன்
கையில் இருந்தால் இலை கொப்புகளை வெட்டி ஆடுகளின் பசியைத் தீர்த்து மகிழ்வான். அதே ஒரு
கொலை காரனிடம் இருந்தால் எதிரியின் தலையை வெட்டி
மகிழ்வான். என்வே இதை வைத்திருப்பவன் குணத்தைப் பொருத்தது. மேலும் மாந்திரீகத்தில்
அனைத்தும் சாத்தான் செய்கிறது என்பதும் முற்றிலும் உண்மை இல்லை. ஏனென்றால், சாத்தான்
நம்பிக்கை இல்லாத மந்திரவாதிகளும் இருக்கிறார்கள். இவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட தேவதைகளை
நம்பக்கூடியவர்கள். எனவே சாத்தான் என்பது கட்டாயப்படுதும் பொருட்டு கிறிஸ்தவர்கள் மூலம்
உருவாக்கப்பட்ட ஒன்று. ஆகவே சாத்தானுடைய அச்சத்தை விடுங்கள். ஆனால் இந்த மந்திரவாத
கலையை தீய எண்ணத்துடன், தீங்கு செயலுக்காக மந்திரம், சடங்குகள் மற்றும் தொழில் நுட்பத்துடன்
இயற்க்கை மீது மிகவும் நம்பிக்கை கொண்டு நடைமுறைபடுத்தி வருவது மிகவும் ஆபத்தானதும்
கூட. மேலும் மாந்திரீகத்தை விழயாட்டாகச் செய்யும் போது அது வேடிக்கையாகிறது. கோவத்துடன்
வேகமாகச் செய்யும் போது அது சூனியமாகி கொடூர தீங்காகிறது. குணத்துடன் நிதானமாகச் செய்யும்
போது அது ஒரு மகத்தான மருந்தாகிறது. மாந்திரீக தர்மப்படி அறமுறையாக செய்தால் உன் வாழ்க்கை
நிச்சயம் வளமாக இருக்கும்.
மாந்திரீக நிவாரணம்:
காலகாலமாக ஒரு பெரிய அளவில் மக்களுக்கு நல்லது செய்யும் முயற்சியாக சமய மரபில் பலர் நமது எண்ணங்களை கட்டுப்படுத்த உதவியாக மந்தரங்களை உருவாக்கியுள்ளனர். இது ஒரு மனத்திரனின் அமானுஸ்ய ஆற்றல் வகையான, மிகவும் பழமையான மற்றும் பொதுவான ஒன்றாகும். எனவே மாந்திரீகம் மனம் சார்ந்த ஆய்வின் பயன்பாடாக உள்ளது. இதில் மனப்பயிற்சி, குறியீடுகள்(மந்தரம், யந்தரம், தியானம்) பயன்படுத்தப் படுகிறது. இதை கையாளுபவர்களை சாத்தான் வாதிகள், பிசாசு வழிபாடு அல்லது கருப்புகளின் துணையில்(கருப்பு வித்தை மிகவும் ஆபத்தானது) மந்திரிப்பவர்கள் என்ற பொருளில் மக்கள் பெரும்பாலும் கூறுகின்றனர். இது வெறும் தவறான தகவல். இது ஒரு மனத்திரன் ஆற்றல் கலையாகும்.
மாந்திரீகத்தில் என்ன செய்ய முடியும்?:
மாய மாந்திரீகத்தை பயன் படுத்தி மருந்துகள் இல்லாமல் நினைவாற்றலை உயர்த்தி புதிய அனுபவங்களைப் பெற முடியும். மனம் சார்ந்த நிகழ்வுகளை மற்றும் பிறறையோ அல்லது ஒரு பொருளையோ தன்னிச்சைப்படி கட்டுப்படுத்தி செயல் படுத்த முடியும். சிறந்த சுகாதாரம் நல்ல அதிஸ்டத்தைக் கொண்டுவர முடியும். தன்னையும் தன் சூழலையும் மாற்றி வாழ்க்கையை நன்றாக மற்றும் சீராக அமைத்துக் கொள்ள முடியும். கெட்ட பழக்கங்களைக் கட்டுப்படுத்தி புதிய நோக்கங்களை உருவாக்க மற்றும் ஆளுமை பண்புகளை வளர்க்க முடியும். இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலத்தைப் பற்றி அறிய மற்றும் மற்றவருடைய அனுமதியுடன் அல்லது அனுமதியின்றி அவர்கள் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களுடைய நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற நுட்பங்களை கொண்டுள்ள மாந்திரீகம் ஒரு மகத்தான சக்தி வாய்ந்ததாகும். இதை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
மாந்திரீகத்தின் பக்க விளைவுகள்:
தீயதுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, முடிவை பொருட்படுத்தாமல் மாய செயலில் விரும்பியதை செய்கிற போது அதனால் பக்க விளைவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இவைகள் பலன் தரும் என்பதால் இது போன்ற பக்க விளைவுகளை ஏற்க முடியுமா? தங்க ஊசி என்பதால் வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா? எனவே ஆக்கப்பூர்வமான மாந்திரீகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் தீங்கு விளைவிக்கும் எந்த மந்திர வித்தைகளானாலும் அது பக்க விளைவுகளை உருவாக்கக் கூடும் மற்றும் மிகவும் ஆபத்தானது. இதில் 64 கலை வடிவங்கள் உள்ளன. இந்த மாந்திரீகத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றவோ அல்லது மோசடிகள் செய்தாலோ உனக்கு ஐயோ கேடு சம்பவிக்கும்.
பேய், பிசாசு, பில்லி, சூனியம், சாப, பாபம், துஸ்ட தேவதைகளின் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் மற்றும் மாந்திரீகம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். சிறந்த முறையில் சிகிச்சை மற்றும் மாந்திரீக பயிற்சியும் அளிக்கப்படும். செல்: 9150411909.