Translate This Page
எங்களை பற்றி
தி இண்டர்நேஸ்னல் மிராக்கில் எபெக்ட் டிரஸ்ட் - The International Miracle Effect Trust - என்பதை சுருக்கமாக ‘டைம் டிரஸ்ட் - Time Trust’ என்று அழைக்கப்படும். இது இந்திய அறக்கட்டளைகள் சட்டம் 1882 - ன் கீழ் (பதிவு. எண்:385/2011), தெய்வீக நிவாரணர் அருளானந்து அவர்களின் மூலம் 2011 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்ட, இது ஒரு அரசு சாரா தொண்டு நிறுவன (NGO) அடிப்படையான அமைப்பாகும்.
ஸ்தாபனம்:
டைம் அறக்கட்டளை மதம், ஆன்மீக சுதந்திரம், தெய்வீக நிவாரணம், மாந்திரீக நிவாரணம், மூலிகை, கல்வி, சுகாதாரம் மற்றும் இயற்கை ஆற்றல்களை ஆராயும் ஒரு அறநிறுவனமாக 2011 இல் தொடங்கப்பட்டது.
பார்வை:
அனைத்து மக்களும் தங்கள் வாழ்வில் உடல், மனம், ஆன்மா ஆரோக்கியம் பெற மற்றும் பல வழிகளில் சமூகம் மாற்றம் பெற, மனித உறவுகளை மேம்படுத்துவதை ஆர்வமாகக் கொண்டு, ஒரு அமைதியான ஆரோக்கியமான சமூகத்தை சிருஷ்டித்தலையே தொலை நோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய சேவை
உலகில் பலதரப்பட்ட மக்கள் பயன்படும்படி சர்வதேச பிரார்த்தனை மற்றும் நிவாரண நெட்ஒர்க் – The International Prayer & Healing Network அமைப்பையும் படைத்து தன்பால் கொண்டுள்ளது.